ரஷ்யாவுக்கு எதிராக ஒருங்கிணையும் நாடுகள் – வலுவான எதிர்ப்பை தெரிவிக்கும் கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர்

melony russia ukraine

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் ஒருங்கிணைய வேண்டும் என்று கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு செயல்பாடுகளை தடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவோம் என்று உறுதியளித்துள்ளார்.

உக்ரைன் எல்லைக்கு அருகில் 1,00,000க்கும் மேற்பட்ட படைகளை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது. உக்ரேனிய இறையாண்மைக்கான ஆதரவுகளை உறுதி செய்வதற்காக கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி அடுத்த வாரம் உக்ரைனின் தலைநகரம் kyiv-க்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

ரஷ்யாவின் படைகள் மற்றும் ஆயுதங்களை உக்ரைன் மற்றும் அதன் சுற்றுவட்ட எல்லையில் குவிப்பதன் மூலம் முழு நகரத்தின் பாதுகாப்பும் பாதிக்கப்படுவதால் ,ரஷ்யா தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிக்கையில் கூறியுள்ளார்.

சர்வதேச அளவிலான ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கு கனடா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார். உக்ரைனின் பிரதமர் Denys Shmygal -ஐ அமைச்சர் மெலனிக நேரில் சந்திக்க உள்ளார் .

வெளியுறவு துறை அமைச்சர் மெலனியின் பயணம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும். அவரது ஒரு வார பயணத்தின் போது நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்ட்டன்பர்க்கை பிரஸ்ஸல்ஸில் சந்திக்க உள்ளார்.

2015 முதல் உக்ரைனில் இருக்கும் 200 பேர் கொண்ட கனடிய பயிற்சி குழுவிடம் உரையாற்றுவதற்காக நாட்டின் மேற்குப் பகுதிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.