கனடாவில் திடீரென மார்ச் மாத விடுமுறையை ஒத்தி வைத்த மாகாணம்! திகைக்க வைக்கும் தரவுகள்!

Leave
Canada Schools Leave

கனடாவில் இன்று மொத்தம் 3177 தொற்றுகள் பதிவாகியுள்ளது. கனடாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புதிய வைரஸ் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

கியூபெக்கில் 1129 புதிய வைரஸ் தொற்றுகளும், ஒன்டாரியோ பகுதியில் 945 தொற்றுகளும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 449 தொற்றுகளும், அல்பேட்டா பகுதியில் 351 தொற்றுகளும், சஸ்க் வானில் 114 தொற்றுகளும், மணிடோபாவில் 90 தொற்றுகளும் இன்றைக்குப் புதிதாக பதிவாகியுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இன்று கியூபெக் பகுதியில் 37 பேரும், ஒன்டாரியோ பகுதியில் 18 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் 19 பேரும், மணிடோபாவில் மூன்று பேரும் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் இதுவரை 817159 வைரஸ் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. மேலும் 21 ஆயிரத்து 78 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஏழு லட்சத்து 58 ஆயிரத்து 327 பேர் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று பதிவுகள் தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஒண்டாரியோ மாகாணம் மார்ச் மாத விடுமுறையை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஒரு மாத விடுமுறை காலத்தை வைரஸ் தொற்று பரவும் காரணத்தினால் மாகாணம் இம்முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்த ஒத்திவைப்பு தகவல்களை கல்வியமைச்சர் ஸ்டீபன் இன்று பிற்பகல் சுகாதார அமைச்சர் கிரிஸ்டின் எல்லியட் தலைமை மற்றும் தலைமை சுகாதார மருத்துவர் வைத்தியர் டேவிட் வில்லியம்சன் உடன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மார்ச் மாதம் 15 ஆம் தேதி அன்று தொடங்கி 19 ஆம் தேதி வரை முடியும் எனத் திட்டமிடப்பட்ட இந்த ஒரு மாத விடுமுறை ஆனது அடுத்த மாதமான ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படியுங்க: இனி எந்த கவலையும் இல்லை! பிரதமரின் அறிவிப்பால் கனடா முழுக்க நாட்டு மக்கள் மகிழ்ச்சி!