கனடாவில் உடனடியாக வேலைவாய்ப்பு – ஒன்டாரியோ அரசாங்கம் பெரும் தொகையை ஒதுக்கி வைக்க முடிவு

DOUG FORD
DOUG FORD

கனடாவில் covid-19 ஊரடங்கு காரணமாக பல்வேறு மாகாணங்களிலும் மக்கள் வேலைகளை இழந்தனர். வேலையின்மை காரணமாக பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தற்பொழுது கனடாவில் உள்ள மாகாணம் ஒன்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட. வேலை வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோருக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒன்டாரியோ மாகாணத்தின் மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் பணியிடங்களில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தேவைப்படுகின்றனர்.

சுமார் 300 செவிலியர்கள் அதிக அளவில் தேவைப்படும் மாகாணத்திலுள்ள 50 மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மருத்துவமனையில் நோயாளிகளை மேற்பார்வையின் கீழ் கவனித்துக் கொண்டிருக்கும் போதே செவிலியர்களுக்கான பணி உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆராயிரம் சுகாதாரத் துறை பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். மருத்துவ பயிற்சி பெறும் மாணவர்கள் ,செவிலியர் பயிற்சி பெறும் மாணவிகள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பிற மாணவர்களும் இந்த வேலைவாய்ப்பு பணியிடங்களில் உள்ளடங்குவர்.covid-19 வைரஸ் தொற்று காரணமாக ஒன்ராரியோ மாகாணத்தில் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

 

வீரியம் மிக்க ஓமிக்ரோன் வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில் செவிலியர் முதலான பணியாளர்களின் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கு பெரும் தொகையை ஒதுக்க உள்ளதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது