கனடாவில் நிரந்தர வேலை – சர்வதேச நாடுகளிலிருந்து கனடாவிற்கு வரும் தொழிலாளர்களுக்கு அதிகரித்துள்ள வேலைவாய்ப்புகள்

vacant
toronto cbre

கனடாவில் 54700 புதிய காலி பணியிடங்கள் உருவாகியுள்ளன. கனடாவில் கடந்த நவம்பர் மாதம் வேலையின்மை விகிதம் 6% ஆக இருந்தது. தற்பொழுது வேலையின்மை விகிதம் 5.9% ஆக குறைந்துள்ளது. மக்கள் எதிர்பார்த்ததைவிட இரண்டு மடங்கு அதிகமான வேலைவாய்ப்புகளை கனேடிய பொருளாதாரம் உருவாக்கியுள்ளது.

கனடாவில் பகுதிநேர பணியாளர்கள் நிரந்தர பணியிடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் 123000 முழு நேர வேலைகள் அதிகரித்துள்ளன. லேப்ரடார் மற்றும் நியூபவுண்ட்லேண்டில் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன. அதே சமயம் சஸ்கெட்ச்வான் மற்றும் ஒன்டாரியோ மாகாணங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

Covid-19 தொற்று நோயினால் வேலையை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பணியிடத்திற்கு திரும்புகின்றனர். கனடாவில் அதிகரித்துள்ள வேலை வாய்ப்புகளில் சர்வதேச நாடுகளிலிருந்து புதிதாக வருபவர்கள் நிரப்பப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Covid-19 வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடுகளினால் கனடாவிற்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்திருந்தது. தற்பொழுது வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதால் கனடாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கைஅதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அறிவியல், தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தொழில்துறை போன்றவற்றில் வேலைவாய்ப்பு ஆதாயம் மிகப் பெரியது என்று கனடிய புள்ளிவிபர தரவுகள் கூறுகின்றன .வேலை தேடி கனடாவிற்கு படையெடுக்கும் சர்வதேச தொழிலாளர்களும் இதன்மூலம் மிகுந்த பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது