மோசமான நேரம் இது! உலகின் சோகமான குடிமக்களின் தரவரிசையில் கனடியர்கள்!

Canadasad
Canada Is One of the Saddest and Most Anxious Countries in the World

கனடியர்கள் உலகின் சோகமான மற்றும் பதட்டமான குடிமக்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Lenstore’s Global State of Health 2021  அறிக்கையின்படி, உலகளாவிய தொற்றுநோய்களின் போது மன அழுத்தம், பதட்டம் மற்றும் சோகம் ஆகியவற்றை எதிர்கொண்ட மக்கள் வசிக்கும் நாடுகளில் கனடா முதல் ஐந்து இடங்களில் இடம் பெற்றுள்ளது.

உலகெங்கிலும் உள்ள பிராந்தியங்களில் இருந்து மனநலம் மற்றும் புள்ளிவிவரங்கள் குறித்த ஆய்வுகளால் இந்த அறிக்கை உருவாக்கப்படுகிறது.

குடிமக்கள் தங்கள் மன ஆரோக்கியத்துடன் மிகவும் போராடியவர்களில் உலகின் மூன்றாவது நாடு கனடா என்று அறிக்கை முடிவு செய்துள்ளது.

கொரோனா தாக்கத்தின் போது, 26% கனேடியர்கள் மன அழுத்தம், பதட்டம் அல்லது மிகுந்த சோகம் கொண்டிருந்ததாகத் தெரிவித்தனர்.

அமெரிக்கா 33% மக்கள் கொண்டு முதலிடத்தைப் பிடித்தது. கனடாவைப் போன்ற அதே புள்ளிவிவரத்துடன் ஆனால் வேறுபட்ட தரவரிசையுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

2020 என்பது பலரின் மன ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் மிகவும் கடினமான ஆண்டாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம், பதட்டம் மற்றும் ஒட்டுமொத்த சோகம் அனைத்தும் மனநல கவலைகள் ஆகும். தேவையில் உள்ளவர்களுக்கு உதவிட வேண்டுமென்றால், இவற்றிற்குக் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிக்கை தெரிவித்தது.

பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சுவீடன், நெதர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் உள்ளன.

இதையும் படியுங்க: அமெரிக்கா-கனடா இடையிலான முக்கிய திட்டம் இரத்து – புதிய அமெரிக்க அதிபரின் தலைகீழ் மாற்றம்!