இதெல்லாம் போதாது! கனடாவில் கொரோனா தொற்றை அதிகரிக்க செய்யும் சுகாதார நடவடிக்கை!

Statistics Canada
Nine out of 10 Canadians have seen COVID-19 misinformation online: Statistics Canada

வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடுகள் தற்போதைய சுகாதார நடவடிக்கைகளின் கீழ் மீண்டும் எழுச்சி பெறக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.

இன்று வெளியான கனடிய பொது சுகாதார அமைப்பின் தேசிய மாடலின் தரவுகள் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

கனடாவின் பொது சுகாதார அமைப்பின் புதிய திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த கடுமையான எச்சரிக்கை வெளியாகியது.

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் திரேசா டேம் மற்றும் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி, வைத்தியர் கோவா டான் ஜோ ஆகியோர் இன்று அறிவிப்பை  வெளியிட்டனர்.

Covid-19 தொற்றுகள் கனடா முழுவதும் தொடர்ந்து பரவி வருவதால் நாடு முழுவதும் தொற்று மீண்டும் எழுச்சி பெறுவதை தடுக்க தற்போதைய பொது சுகாதார நடவடிக்கைகள் கூட போதுமானதாக இருக்காது என்று தேசிய மாடலின் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

கனடாவின் ஒப்பீட்டளவில் குறைவானவர்கள் இதுவரை தடுப்பூசிகளை பெற்றுள்ள நிலையில் கனடியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் டைம் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஒரு இலட்சம் தடுப்பூசி மருந்துகள் வாரந்தோறும் கனடா வந்து சேரும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: நிதி உதவி நிற்கப்போவதில்லை! கனடா மீட்பு நிதி உதவி திட்டத்தை மேலும் நீட்டிக்கும் மத்திய அரசாங்கம்!