கனடாவில் ஊழியர்களுக்கு புதிய ஊதிய மானியம் வழங்குவதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சர் பில் மோரியோ தெரிவித்தார்.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல பகுதிகளிலும் நோய் தொற்று உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சில நாட்களுக்கு முன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கொரோனாவால் எந்த ஒரு தொழில் நிறுவனமும், பணியாளர்களை நீக்கி விடக்கூடாது என்பதற்காக அடுத்த மூன்று மாதங்களுக்கு ஊதியத்திற்கான, மானியத்தை அரசு வழங்கும்.
கனடா பயணிகளை வெளியேற்ற முடிவு – டொனால்டு டிரம்ப்
தற்போது கொரோனாவால் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்ப்டடுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். நீங்கள் சிறு அளவிலான தொழில் நடத்தி வந்தால் உங்களுக்கு மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக ஊதிய மானியத்தை அரசு வழங்கும். இதன் மூலமாக உங்கள் ஊழியர்களுக்கு நீங்கள் தகுந்த ஊதியத்தை வழங்க முடியும். இதனால் யாரும் வேலையை இழந்து விடக்கூடாது என்பதற்காக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கொரோனாவால் தொழிலில் பாதிப்பு அடைந்தால் உதவி செய்ய, கனடா ஏற்றுமதி நிதியகத்தை தொடர்பு கொள்ளலாம். அதன்மூலம் தேவையான உதவகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அந்நாட்டின் நிதி அமைச்சர் பில் மோர்னியோ கூறுகையில், “கனடா நாட்டு முதலாளிகளுக்கு எனது செய்தி இதுதான். நீங்கள் அனைவரும் உங்களிடம் பணியாற்றும் ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த தயாராகுங்கள். பலர் வேலை இல்லாமல் வறுமை நிலையில் உள்ளனர். அந்த ஊழியர்களை காக்க இந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கனடா நிதியகம் மூலம் விண்ணப்பித்தால் ஏறக்குறைய 6 வாரங்களில் தேவையான நிதி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வணிகங்கள் தங்கள் ஊழியர்களை ஊதியத்தில் வைத்திருக்க நாங்கள் உதவுகிறோம். இதன்மூலம் தற்போதைய சவால்கள் கடந்துவிட்டால் வணிகங்கள் மீண்டும் நிலைபெறும். புதிய ஊதிய மானிய திட்டம் மூலம் பல நன்மைகளை ஊழியர்கள் பெற முடியும்” என்று கூறினார்.