உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் கனடா – கனடிய பிரதமர் உக்ரேனிய பிரதமருக்கு அழைப்பு

hongkong
china diplomat statement to canada about hongkong issue

ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு பயனுள்ள நடவடிக்கைகளை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.மேலும் ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து பொருளாதாரத் தடைகளையும் அறிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைன் அதிபரான Volodymyr Zelensky-யை கனடாவின் நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பை முடிவுக்கு கொண்டுவர நேட்டோ அமைப்பு ரஷ்யாவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை Berlin-இலிருந்து ட்ரூடோ உக்ரைன் அதிபரிடம் பேசியுள்ளார்.உக்ரைன் அதிபர் ” ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து எனது நண்பர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் விவாதித்தேன். பிற ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஒப்புக்கொண்டேன். கனடா உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கிறது என்பதை நாளுக்கு நாள் நாங்கள் உணர்கிறோம் ” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு உறுதுணையாக கனடா செயல்பட்டு வருகிறது.கனடா மிகவும் சிறப்பு வாய்ந்த ராணுவ உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாக தகவல்கள் கூறுகின்றன. கனடிய பிரதமர் ட்ரூடோவின் அழைப்பினை உக்ரைன் அதிபர் Zelenskyy ஏற்றுக்கொண்டார்.

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பு தொடங்கி 14 நாட்கள் கடந்த நிலையில் 400-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.