மார்ச் மாத இறுதிக்குள் கனடா சந்திக்கப்போகும் மோசமான நிலை!

COLCHICINE
CANADIAN ANTI-INFLAMMATORY DRUG COLCHICINE REDUCES COVID-19 RELATED COMPLICATIONS, DEATH

கனடாவில் இந்த மாதத்தின் பிற்பகுதியில் covid-19 தொற்று எண்ணிக்கையானது அதிகரிக்க ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது.

இன்று வெளியான புதிய தரவுகள் மூலம் இந்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

உருமாறிய புதிய வைரஸ் திரிபு களினால் இந்த அளவு அதிகரித்து உள்ளது என்று குறிப்பிடுகின்றனர்.

தொடர்ந்து ஏற்படும் பரவலை கட்டுப்படுத்துவதற்கு எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் மார்ச் மாதத்தின் இறுதிக்குள் நான்காயிரம் முதல் 5000 வரையிலான தொற்றுகளில் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகின்றன.

இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு மோசமான நிலை உருவாகினால் தொற்றுகளில் எண்ணிக்கையானது 8,000 ஆக அதிகரிக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொற்றுகளின் மூன்றாவது நிலையை கட்டுப்படுத்துவதற்கு வீட்டில் தங்கும் நிலை மற்றும் தடுப்பூசி விநியோகித்தல் ஆகியன பற்றி மாகாணங்களுக்கு அறிவுரை வழங்குவது சிறந்ததாகும் என்று சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.

மாகாணங்களில் விதிக்கப்பட்ட மாகாண ரீதியிலான முடக்கம் கடந்த மாதம் வழங்கப்பட்ட வீட்டிலேயே தங்கும் நிலை உள்ளிட்ட பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலமாக ஒன்டாரியோ பகுதியில் நோய்தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதாக Covid-19 தொற்று அறிவியல் ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்று பல தொகுப்புகளாக பரவி வருவதை சுட்டிக்காட்டும் அந்த குழு தற்போது பதிவாகி வருகின்ற எண்ணிக்கையில் 10% வரை புதிய திரிபுகள் இன் தாக்கத்தினால் ஏற்படுவதாக கூறியுள்ளது.

இதன் காரணத்தால் இந்த மாத பிற்பகுதியில் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படியுங்க: கனடாவில் திடீரென மார்ச் மாத விடுமுறையை ஒத்தி வைத்த மாகாணம்! திகைக்க வைக்கும் தரவுகள்!