கனடியத் தேர்தலில் வெற்றி-வெற்றிக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விதம்

Justin Trudeau
canada says PM Justin Trudeau

கனடாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை தக்கவைத்துக் கொண்டார் லிபரல் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. Covid-19 வைரஸ் தொற்று காலத்தில் செப்டம்பர் 20ஆம் தேதி கனடாவில் தேர்தல் நடத்தப்பட்டது.

கனடியர்கள் மீண்டும் லிபரல் கட்சியை தேர்ந்தெடுத்து வெற்றி பெறச் செய்துள்ளனர்.
Covid-19 வைரஸ் பெருந்தொற்று காலகட்டங்களில் கனடாவின் பொருளாதாரம் மற்றும் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் மற்றும் கட்டுப்பாடுகள் போன்றவற்றை சிறப்பாக வழிநடத்தி கனடிய மக்களின் ஆதரவுகளை லிபரல் கட்சியின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

2019ஆம் ஆண்டு தேர்தலில் 170 இடங்களில் லிபரல் கட்சி வெற்றி பெற்றது. இந்த ஆண்டு லிபரல் கட்சி 14 இடங்கள் இழந்து 156 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. லிபரல் கட்சியினர் சிறுபான்மை இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் எரின் ஓ டூல் 121 இடங்களில் முன்னிலை வகிக்கிறார்.

NDP கட்சி 27 இடங்களில் அதிக அளவிலான வாக்குகளை பெற்று உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை covid-19 வைரஸ் பெருந்தொற்றினை கனடா முழுவதும் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தி வழி நடத்தியதில் கனடியர்கள் மத்தியில் நல்ல சிந்தனைகளை ஜஸ்டின் ட்ரூடோ பெற்றிருந்தார். ஆனால் covid-19 நான்காவது அலைக்கு மத்தியில் தேர்தலை அழைத்ததன் காரணமாக ஜஸ்டின் ட்ரூடோ மீது கனடியர்கள் அதிருப்தி கொண்டனர்.

எதிர்க்கட்சி தலைவர்கள் covid-19 வைரஸ் தொற்றுக்கு மத்தியில் ட்ரூடோ தேர்தலை அழைத்தது குற்றம் சாட்டி விவாதம் செய்தனர். இருப்பினும் லிபரல் கட்சியினர் கடந்த ஆட்சியில் ஊரடங்கு காலத்தில் மற்ற நாடுகளை விட சிறப்பான முறையில் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் வழி நடத்தியதாக தாராளவாதிகள் குறிப்பிட்டுள்ளனர்.