கனடாவிற்கு குடியேறியவர்களின் சதவீதம் -கனடாவில் வாழும் அதிக அளவு இந்தியர்கள்

Canada ranked one of the most free countries in the world
Canada ranked one of the most free countries in the world

கனடாவில் செப்டம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கனடிய மக்கள் தேர்தலில் தவறாது வாக்களிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கனடியர்கள் தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்கு வாக்களித்து கனடாவிற்கான தலைவரை தேர்ந்தெடுப்பது அவசியமானதாகும். தேர்தலை எதிர்நோக்கி கட்சிகளின் தலைவர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

தேர்தல் வாக்கெடுப்பு குறித்த கருத்துகணிப்பு சனிக்கிழமை வெளியிடப்பட்டது .கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் எரின் 33% வாக்களிப்புகளையும் பிரதமர் மற்றும் லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ 32% வாக்களிப்புகளையும் பெறுவதாக கருத்துக்கணிப்பு தகவல்கள் கூறுகின்றன.

கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் லிபரல் கட்சியின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கி மல்யுத்தம் செய்வதாக கூறப்படுகிறது. The Quint -ல் தேர்தல் மற்றும் அரசாங்கம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான 170 இடங்களில் இருந்து 157 இடங்களாக லிபரல் கட்சி குறைந்தது. 2015ஆம் ஆண்டு 184 இடங்களைப் பெற்று லிபரல் கட்சி பெரும் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

2015ஆம் ஆண்டு முதல் ஜஸ்டின் ட்ரூடோ தலைமை வகிக்கும் லிபரல் கட்சி 3.4 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நிரந்தர குடியேற்ற வசதிகளை விரிவுபடுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து மக்கள் அதிக அளவில் கனடாவில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து கல்வி மற்றும் பணி போன்ற காரணங்களுக்காக கனடாவிற்கு அதிக அளவில் இந்தியர்கள் புலம் பெயர்வதால் முக்கிய ஆதார நாடாக இந்தியா விளங்குகிறது.

கனடாவின் மக்கள்தொகையில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பிற நாடுகளிலிருந்து கனடாவிற்கு குடியேறியவர்கள் இன்று 2019 ஆம் ஆண்டு புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன.