வீறுகொண்டு மீண்டெழும் கனேடிய பொருளாதாரம்! சமீபத்தில் காட்டப்பட்ட அறிகுறி!

Hemb
indo canadian harpreet indian

கனடாவின் புள்ளியல் அளவீடுகள் தற்பொழுது காலாண்டு இறுதியில் பொருளாதாரம் 6.5% உயர்ந்து உள்ளதாக தகவல்களை வெளியிட்டுள்ளன.

முதன்மை பொருளாதார கணக்கியலின் படி வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் அடைந்துள்ள உயரத்தை ஆண்டு பொருளாதார கணக்கியல் உடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது 9.6 சதவீதம் கடந்த 2020 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் பதிவாகிய புள்ளிவிவரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவின் புள்ளிவிவரம் வெளியிட்ட தகவலின்படி கடந்த பிப்ரவரி மாதம் 0.4% உயர்ந்திருப்பதாகவும் மேலும் மார்ச் மாதம் 0.9% உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள பல்வேறு சேவை நிறுவனங்கள் மற்றும் சரக்கு உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவை கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கணிசமான உயர்வை அடைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2010ஆம் ஆண்டில் covid-19 ஊரடங்கு காரணமாக அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த காரணத்தால் புள்ளிப் பட்டியலில் சரிவு கண்டிருந்தது. தற்பொழுது பல்வேறு தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் மேம்பாட்டு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு வணிகம் ஓரளவு சீர்படுத்த பட்டிருப்பதால் முதல் மூன்று மாதத்திலேயே வேறுபாடு காண முடிந்தது என்று பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் பலர் வேலை வாய்ப்புகளை இழந்து, மற்றும் சிலர் வணிக நிறுவனங்களில் நஷ்டங்கள் ஏற்பட்டு கீழ்நோக்கி சென்றதால் பொருளாதாரம் சரிந்தது என்று கூறப்படுகிறது.

தற்பொழுது பொருளாதாரம் மீட்சி அடைய தொடங்கியிருப்பதை இந்த மூன்று மாதத்தில் புள்ளி பட்டியல் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்படுகிறது.