கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7,897 ஆக உயர்வு!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 96,244 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக, அமெரிக்கா மற்றும் கனடா இடையான போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

இதனால் வணிகம் சார்ந்த பணிகள் முற்றிலுமாக தடைபட்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி கனடாவில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,244 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கனடா சுகாதார அமைப்பு கூறுகையில்,

கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,200 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 18 லட்சத்துக்கு அதிகமான மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 7,897 பேர் இதுவரை பலியாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.