கனடாவில் 10 இலட்சத்தை நெருங்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு!

bc
bc ( Evan Mitsui/CBC News)

கனடாவில் Covid-19 வைரஸ் தொற்றினால் பலர் பாதிப்படைந்து உள்ளனர். மேலும் பல உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளது.

இதுவரை கனடாவில் கொரோனா  வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தை தாண்டியுள்ளது.

தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி ஒன்பது லட்சத்து 51 ஆயிரத்து 562 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கனடாவில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் உலக நாடுகளில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளில் கனடா 23 வது நாடாக இடம்பெற்றுள்ளது.

பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தை தாண்டி உள்ள நிலையில் இதுவரை இவர் 22790 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 5 ஆயிரத்து 192 பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் கோவிட் 19 வைரஸ் தொற்றினால் 36 பேர் மரணித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகின்றன.

இதனோடு மருத்துவமனைகளில் சுமார் 38 ஆயிரத்து தொள்ளாயிரத்து 92 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 638 பேரின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இ

ந்நிலையில் கனடாவில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன