கனடாவில் தடுப்பூசி மருந்துகள் விநியோகித்தலில் இனி சிக்கல் இருக்கப் போவதில்லை!

HEALTH-CORONAVIRUSCANADA

கனடாவில் covid-19. வைரஸ் தொற்றின் தீவிர நிலையை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.

கனடா முழுவதும் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் அதிரடியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளையில் கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்துகள் இரண்டாவது கட்டமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அரசாங்கத்தின் அறிவுரை மற்றும் மருத்துவ ஆலோசனை குழுக்களின் வழிகாட்டுதலின்படி தடுப்பூசி மருந்துகள் விரைவாக வினியோகம் செய்வதற்கு ஏற்பாடுகள் அனைத்தும் முறையே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் மாகாணங்களின் ஒரு சில பகுதிகளில் தடுப்பூசி வினியோகம் செய்வதில் இடையூறுகள் இருப்பதாக கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதனை அடுத்து தடுப்பூசி வினியோகம் சீரற்ற நிலையில் இருப்பதாக பல்வேறு கட்சி உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

தடுப்பூசி மருந்து விநியோகித்தல் சீரற்ற நிலையில் இருப்பதால்தான் கனடாவில் covid-19 வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இயலவில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் அனிதா ஆனந்த் அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் covid-19 வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி மருந்துகள் கொள்வனவு செய்தலில் சீரமைப்பு செய்யவுள்ளதாக கூறியிருக்கிறார்.

மேலும் உள்நாட்டில் கொரானா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் அனைத்தையும் சீராக விநியோகித்து வருவதாகவும், இது தொடர்ச்சியாக கனடாவின் அனைத்து பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருவதால் தடுப்பூசி மருந்துகள் விநியோகித்தல் சிக்கல்கள் இனி இருக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.