கனடாவில் இதுவரை இல்லாத அளவு பதிவான கொரோனா தொற்றின் எண்ணிக்கை! மருந்துகளின் மொத்த ஏற்றுமதி முடக்கம்!

Corona Case Canada
Canada Covid 19 Press release

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சகட்ட அளவை நெருங்கி வருகிறது.

கொரோனா முதல் அலையை காட்டிலும், இரண்டாது அலையின் தீவிரம் எதிர்பார்த்ததை விட மிகக்கடுமையானதாக உள்ளது.

இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை உச்ச அளவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 7861 பேர் பாதிக்கப்பட்டதோடு, 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் வைரஸ் தொற்று பரவிய நாளில் இருந்து, பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

இந்த நிலையில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு உள்நாட்டிலேயே பற்றாக்குறை ஏற்பட்டதின் காரணமாக, மருந்து ஏற்றுமதியை கனடா மொத்தமாக நிறுத்தியுள்ளது.

கனேடிய சந்தைக்குள் இருக்கும் சில முக்கிய மருந்துகள் கனடாவுக்கு வெளியே நுகர்வுக்காக விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளன.

அது போல மருந்துகளை விற்பனை செய்வது, தொற்று பரவி வரும் இந்த சூழலில் கனடாவில் அத்தியாவசிய மருந்து பற்றாக்குறையை ஏற்படுத்தும். அது நிலையை இன்னும் மோசமாக்கும் என கனேடிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 29 ஆவது நாடாக விளங்குகிறது கனடா.

மொத்தமாக 3,78,139 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 12,130 பேர் உயிரிழந்துள்ளனர்

மேலும், 66,037 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 492 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 2,99,972 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 15 ஆம் தேதிக்குள், நாளொன்றுக்கானதொற்றுகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்க விடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

இதையும் படியுங்க: கனடாவில் இதுவரை இல்லாத அளவு பதிவான கொரோனா தொற்றின் எண்ணிக்கை! மருந்துகளின் மொத்த ஏற்றுமதி முடக்கம்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.