கனடாவில் முன்பை விட வேகமாக பரவிக்கொண்டிருக்கும் கொரோனா – கட்டுப்பாடுகள் மிகக்கடுமையாக்கப் படுகிறதா?

Canada

உலக நாடுகள் அனைத்தும் covid-19 வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கையை எதிர்த்து போராடி வருகிறது. இந்த வரிசையில் கனடா covid-19 வைரஸ் தொற்றினால் பெரும் சவாலை ஏற்றுள்ளது.

கனடாவில் நாளுக்குநாள் மூன்றாவது அலையாக covid-19 வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

Covid-19 வைரஸ் தொற்று தொடர்ந்து மரணங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கனடாவில் உள்ள பல்வேறு மாகாண அரசாங்கங்களும், அந்தந்த மாகாணத்தின் பாதிப்பிற்கு ஏற்ப கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் அறிவித்து வருகிறது.

வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலை, ஊரடங்கு, மீள திறந்த தளர்வுகள் மற்றும் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து கட்டுப்பாடுகள் பல்வேறு திட்டங்களும் அமலில் உள்ளது.

இருப்பினும் covid-19 தொற்று முன்பை விட வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. கனடாவில் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியிருக்கிறது.

தற்பொழுது வரை கனடா முழுவதும் 11 லட்சத்து 39 ஆயிரத்து 43 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமான பதிவுகள் வெளியாகியுள்ளன.

மேலும் கனடாவில் ஒரே நாளில் 7 ஆயிரத்து 270 பேர் வைரஸ் தொற்று பரவலின் காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.

இதே நிலையில் 46 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கனடாவில் இதுவரை covid-19 வைரஸ் தொற்றினால் 23 ஆயிரத்து 713 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கனடா தொடர்ந்து covid-19 வைரஸ் தொற்றினை எதிர்த்து தீவிரமாக போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.