கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று எதிர்பார்த்த அளவிற்கு கட்டுக்குள் வரவில்லை!

covid19

கனடாவில் பல்வேறு மாகாணங்களிலும் வைரஸ் தொற்று பரவல் எண்ணிக்கையானது அதிகரித்துக்கொண்டே இருப்பதால் ஒவ்வொரு பகுதியையும் நிறத்தின் அடிப்படையில் பிராந்திய பகுதிகளாக பிரித்து ஊரடங்கு மற்றும் ஊரடங்கு தளர்வு களை அறிவித்து வருகின்றனர்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகளும் நடவடிக்கைகளும் கனடா அரசாங்கத்தால் முறையே எடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் வைரஸ் தொற்று எதிர்பார்த்த அளவிற்கு கட்டுக்குள் வரவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

மேலும் டொரன்டோ மருத்துவர்கள் வைரஸ் தொற்று பரவலை சாம்பல் நிறத்திற்கு கீழ் கொண்டுவருமாறு வலியுறுத்தி உள்ளனர்.

கனடாவின் டொரன்டோ பகுதியில் மிகப்பெரிய சந்தைகளும் வணிக வளாகங்களும் கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளுடன் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சில்லரை கடைகளையும் மீள திறப்பதற்கான பரிசீலனை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் இனி வரும் மாதங்களில் கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளுடன் கூடிய மீள திறப்பு நிறுவனங்களை வழி நடத்த வேண்டுமென்றும் கனடா அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் குழு ஆலோசனை தெரிவித்துள்ளது.

கனடாவில் ஏற்கனவே அத்தியாவசிய வர்த்தக நிறுவனங்களுக்கு மீள திறப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.