“கொரோனா தடுப்பூசி” – புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கனடா பிரதமர்..!

Corona Vaccine

கனடா நாட்டு மக்களை இந்த பெரும் தொற்றில் இருந்து பாதுகாக்க (Corona Vaccine) கூடுதலாக ஒரு கொரோனா தடுப்பு மறுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.

Medicago என்ற நிறுவனத்திடம் இருந்த டன் (Corona Vaccine) கணக்கில் மறுத்து டோஸ்களை பெற இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பை பிரதமர் திரு. ஜஸ்டின் ட்ரூடோ அவர்களை நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் நல்ல பலன்கள் கிடைத்துவருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பல நாடுகளில் இந்த கொரோனாவிற்கான தடுப்பூசி ஆராய்ச்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதே போல இந்த ஆராய்ச்சியில் Medicago நிறுவனத்திற்கு பெடரல் அரசு சுமார் 173 மில்லியன் டாலர் அளவிற்கு நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுஒருபுறம் இருக்க மேலும் 18 மில்லியன் டாலர் அளவிலான நிதியினை வான்கூவர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவ நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதுவறை கனடா அரசு 300 மில்லியனுக்கும் அதிகமான அளவை கொண்ட தடுப்பூசி டோஸ்களை பெற ஒப்பந்தமிட்டுள்ளதாக கனடா மிரர் நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

உலக அளவில் பல லட்சம் மக்களை இந்த கொரோனா கொன்றுகுவித்து வருவது மக்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படியுங்க: கனடாவிற்கு சீனா விடுத்துள்ள பகிரங்க மிரட்டல்! கனேடிய மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலா?

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.