உக்ரேன் பிரதமருடன் உரையாடிய ட்ரூடோ மற்றும் பைடன் – கனடாவிற்கு நன்றி தெரிவித்த உக்ரேனிய போர்வீரர்

justintrudeau

உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யாவிற்கு அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன. உலகின் பிரபலமான மற்றும் தனித்துவம் வாய்ந்த ஆப்பிள் நிறுவனம் ரஷ்யாவில் தனது வர்த்தகத்தை நிறுத்துவதாக தெரிவித்தது. ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ரஷ்யா தனது செயல்களில் இருந்து பின்வாங்காமல் முன்னேறிச் செல்கின்றது.

உக்ரைனில் உள்ள ஒரு பெரிய அணு மின் நிலையம் மீதான தாக்குதலுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். Zaporizhzhia அணுமின் நிலையம் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்கள் பற்றி வியாழக்கிழமை அன்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரேனிய பிரதமர் Volodymyr Zelenskyy-யுடன் உரையாடியதாக கூறினார்.இத்தாக்குதல் தீயை உருவாக்கியது மேலும் சேதமடைந்த மின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு கசிந்து விடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.

பொறுத்துக் கொள்ள முடியாத ரஷ்யாவின் தாக்குதலை ரஷ்யா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் ட்ரூடோ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அணுமின் நிலையத்தின் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் உக்ரேனிய பிரதமருடன் ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து பேசியதாக பிரதமரின் வெள்ளை மாளிகை தெரிவித்தது.

ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை அதிகரித்து, உக்ரேனிய ராணுவ படைகளுக்கு ஆயுதங்களை வழங்கி மற்றும் போரில் இருந்து தப்பி ஓடிய உக்ரேனிய மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கிய கனடாவிற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக உக்ரேனிய போர்வீரர் Kyiv நகரிலிருந்து தெரிவித்தார்