கனடாவில் புகையை கண்டறியும் கருவி கட்டாயமாக்கப்படும் – 2022 புத்தாண்டில் புதிய சட்டங்களை அமல்படுத்துகிறது கூட்டாட்சி அரசாங்கம்

law 2022 plastics ban

கனடாவில் 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரதமர் தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார். Covid-19 வைரஸ் தொற்று காரணமாக கூட்டாட்சி அரசாங்கம் சட்டங்களை மாற்றியமைப்பதில் பின்தங்கி இருந்தது. 2022 புத்தாண்டில் புதிய விதிகளை மத்திய மற்றும் மாகாண ரீதியாக மாற்றியமைத்து ஒழுங்குபடுத்த உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி மாற்று சிகிச்சைகள் தடைசெய்யும் மத்திய அரசாங்கத்தின் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒரு மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்ட 30 நாட்களுக்கு நடைமுறைக்கு வராது. எனவே 2022 ஆம் ஆண்டு ஜனவரி ஏழாம் தேதி வரை மாற்று சிகிச்சைக்கு எதிரான சட்டம் அமலுக்கு வராது.

மாற்று சிகிச்சையானது ஒரு பாலினத்திலிருந்து மற்றொரு பாலினத்திற்கு மாற்ற அல்லது பாலின குறியை சிஸ்ஜெண்டராக மாற்ற முயற்சிக்கும் சிகிச்சையாகும். தடைசெய்யப்பட்ட வீதியை அத்துமீறி சிகிச்சை செய்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும்.

இந்த மாற்று சிகிச்சை குறித்த நடைமுறையை விளம்பரப்படுத்துவது மற்றும் அதன் மூலம் லாபம் ஈட்டுவது இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை மட்டுமே உபயோகிக்கப்படும் நெகிழிப்பைகளுக்கு கனடிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. நோய்வாய்ப்பட்ட ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படும்.

ஆல்பர்ட்டாவின் பகல் நேர பராமரிப்பு கட்டணம் பாதியாக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சஷ்கெச்சுவானின் அனைத்து குடியிருப்பு கட்டிடங்களிலும் கட்டாயமாக புகை கண்டறியும் கருவிகள் பொருத்தப்படும். இதன்மூலம் தீ விபத்துக்களை தவிர்க்கலாம் என்று கூறியது.