எந்த நாட்டு பயணிகளும் கனடாவிற்குள் நுழைய முடியாது! எவ்வளவு நாள் இருக்கும் இந்த உத்தரவு.?

canadaentry

கனடாவில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வருவதன் காரணமாக,  வெளிநாட்டு பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31ஆம் தேதி வரை  இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதோடு மட்டுமல்லாது, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து வகையான  பயணங்களும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய காரணங்களுக்காக அமெரிக்காவிலிருந்து வருபவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கனடாவில் சிக்கியுள்ள மற்ற நாட்டவர்களை அழைத்துச் செல்ல வரும் சிறப்பு விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms