கனடா சிருங்கேரி கோவிலில் புத்தாண்டு 2020 கூட்டு பிரார்த்தனை – முழு விவரம் இதோ

canada best hindu temple Sringeri Temple of Toronto
canada best hindu temple Sringeri Temple of Toronto

SRINGERI VIDYA BHARATI FOUNDATION (SVBF) New Year 2020 Group Prayer: கனடாவின் டொராண்டோவில் உள்ள சிறந்த இந்து கோவில்களில் சிருங்கேரி கோவில் ஒன்றாகும். உலகம் முழுவதிலுமிருந்து இந்துக்கள் இங்கு தொடர்ந்து வருகிறார்கள். இந்த கோவிலில் கர்நாடக கோயில்களை ஒத்த ஒரு அற்புதமான கட்டிடக்கலை உள்ளது.

1 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட இந்த கோயில், ஜூன் 20, 2010 ஞாயிற்றுக்கிழமை அன்று உலகம் முழுவதிலுமிருந்து 250 க்கும் மேற்பட்ட ஆறுகளிலிருந்து நீர் கொண்டு புனிதப்படுத்தப்பட்டது. அந்த நிகழ்வில் 10,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடினர்.

மேலும் படிக்க – கனடா மக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது! (வீடியோ)

மஹா கும்பாபிஷேகம் விழா ஏ.டி.என், தமிழ் ஒன், ஆம்னி தொலைக்காட்சி, விஷன் டிவி, டிவி ஆசியா, ஸ்டார் நியூஸ், ஜெயா டிவி மற்றும் பல தொலைக்காட்சி சேனல்களால் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய அப்போதைய கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், “இந்த வளாகம் கனடாவின் மற்றும் இந்தியாவின் பெருமை வாய்ந்த பன்மைத்துவ மரபுகளுக்கு ஒரு சான்றாக நிற்கிறது.

மேலும் படிக்க – Canada Holidays 2020: கனடாவில் எந்தெந்த நாட்களுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இங்கே

இந்த வழிபாட்டுத் தலம் ஒரு முக்கியமான அடையாளமாகவும், கனடாவின் கலாச்சார நிலப்பரப்பில் இந்து சமூகத்தின் இடத்திற்கு பொருத்தமான ஒன்றாகவும் உள்ளது” என்றார்.

இவ்வளவு பெருமைகளை கொண்ட சிருங்கேரி கோவில், கனடாவில்

80- 84 Brydon Drive, Etobicoke, Toronto, Ontario, Canada
M9W 4N2

என்ற முகவரியில் உள்ளது.

Tel No: 416-745-1010

www.svbfcanada.com

இந்த கோவிலின் Geographic coordinates 43.72015°N 79.57356°W ஆகும்.

கோவில் திறந்திருக்கும் நேரம்

8.30 am to 11.30 am
4.30 pm to 8.30 pm

வார இறுதி நாட்களில்,

8.30 am to 8.30 pm

புத்தாண்டு 2020 கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு:

மேலும் முழு தகவல்களுக்கு www.svbfcanada.com தளத்தை க்ளிக் செய்யவும்