கனடாவில் வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பங்கள் – இந்தியர்களுக்கு PR அங்கீகாரத்தை வழங்குவதற்கான செயலில் களமிறங்கியுள்ள கனடா

Canada Tamil News
Canada delhi

Covid-19 வைரஸ் தொற்று காரணமாக கனடிய அரசாங்கம் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு மேலாக இந்தியாவிலிருந்து நேரடி விமானங்களை ரத்து செய்திருந்தது. கனடாவில் இந்திய குடியேற்றம் இந்த ஆண்டு ஒரு புதிய சாதனையை உருவாக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.கனடாவில் குடியேறுவதற்கு இந்தியர்கள் அதிக அளவில் முனைப்புடன் உள்ளனர்.

கடந்த ஆண்டு covid-19 வைரஸ் தொற்று காரணமாக கனடாவில் (PR) நிரந்தர குடியிருப்பாளர் அங்கீகாரத்தை இந்தியர்கள் பெறுவதற்கு வீழ்ச்சி ஏற்பட்டது. தற்போது 2021 ஆம் ஆண்டில் PR அனுமதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சுமார் 69,104 இந்தியர்கள் ஆகஸ்ட் மாத இறுதி வரை நிரந்தர குடியிருப்பாளர்கள் அங்கீகாரத்தை கனடிய அரசாங்கத்தால் பெற்றுள்ளனர் .இந்த வருடத்திற்கான நிரந்தர குடியிருப்பாளர்கள் அங்கீகாரம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

2020 ஆம் ஆண்டில் 37,125 பேருக்கும், 2019 ஆம் ஆண்டில் 84,114 பேருக்கும் நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்தை கனடா வழங்கியுள்ளது. கனடாவில் இருப்பவர்களுக்கு நிரந்தர குடியிருப்பிற்கான நடவடிக்கைகளை நிரூபிக்குமாறு இந்த ஆண்டு மே மாதம் முதல் கனடா அழுத்தம் கொடுத்து வருகிறது.

கனடாவின் அத்தியாவசியத் துறைகளில் தற்காலிக ஊழியர்களுக்கான 30,000 விண்ணப்பங்களும், கனடிய நிறுவனத்தில் பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்களுக்கு 40,000 விண்ணப்பங்களும் மற்றும் சுகாதாரத் துறையில் தற்காலிக பணியாளர்களுக்கான 20,000 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று IRCC தெரிவித்துள்ளது.

Covid-19 வைரஸ் தொற்று காலத்தில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தனது எல்லையை நீண்டகாலமாக மூடியிருந்த போது கனடா பல்வேறு குடும்பங்களுக்கு சாத்தியமான நாடாக அமைந்தது. தற்போது அதிக அளவிலான குடியேற்ற எண்ணிக்கைகளை இலக்குகளாக கனடா நிர்ணயித்துள்ளது இந்தியர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.