கொரோனா பாதிப்பை அமெரிக்காவை விட சாதுர்யமாக கையாளும் கனடா!

trudeau_trump
Travel restriction To be extend

கொரோனா தொற்று பாதிப்பை பொறுத்த வரையில், அமெரிக்காவை விட கனடா நிலையை சிறப்பாக கையாள்கிறது என பிரதமர் ஜஸ்டின் கூறியுள்ளார்.

கனடாவை விட 9 மடங்கு பெரிய மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா 1,35,000 க்கும் அதிகமான இறப்புகளை பதிவு செய்தது. இது கனடாவில் 8,783 ஆக உள்ளது என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா கனடா இடையிலான முடக்க நிலை கட்டுப்பாடுகள் இன்னும் சில தினங்களில் முடிய உள்ள நிலையில், கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்பட உள்ளன.

இதற்காக இருநாட்டு தரப்பிலும் பேச்சுவாரத்தை நடந்து வருகிறது. தொடர்ந்து அமெரிக்காவுடன் அத்தியாவசியமற்ற பயணத்திற்கு வாய்ப்பில்லை என்று உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த தடை பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 21 உடன் முடிவடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms