அமெரிக்காவிடம் போர் விமானத்தை வாங்கிய கனடா – 50 வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவிடம் வாங்கப்படும் விமானங்கள்

canada air force america

கனடாவின் லிபரல் அரசாங்கம் நாட்டின் விமானப்படைக்கு எந்த போர் விமானத்தை வாங்க திட்டமிட்டுள்ளது என்ற யோசனையில் நீண்டகாலமாக இருந்த கனேடியர்களுக்கு இந்த வருடம் சிறந்த பதில் கிடைக்கும்.

F-35 அல்லது Gripen-E ஆகிய விலை உயர்ந்த விமானங்களுக்கு இடையே தேர்வு செய்யப்படும்.கனடா அதிகாரபூர்வமாக டிசம்பர் 1ஆம் தேதியன்று போயிங்கை தவிர்த்து ,ஏலதாரர்களின் துறையை இரண்டு உற்பத்தியாளர்களுக்கு குறைத்து உள்ளது.

CF 18 விமானங்களை மாற்றுவதற்கான $19 பில்லியன் டாலர்கள் திட்டத்தில் அவற்றின் ஏலம் ஒட்டாவாவின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்று அமெரிக்க விண்வெளி நிறுவனத்திடம் தெரிவித்தது. ஏலத்தில் வெற்றியாளரை தேர்ந்தெடுத்து கூட்டாட்சி அரசாங்கம் ஒப்பந்தத்தைப் பற்றி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும்.

F-35 விமானத்தை வாங்கினால் பல தசாப்தங்களாக அமெரிக்காவின் ராணுவ கூட்டணியில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உட்பொதிக்கப்படுவோம் என்று தலைநகர் ஒட்டாவாவை தளமாகக் கொண்ட கனடிய உலகளாவிய விவகார நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் மூத்த ஆய்வாளரான டேவிட் பெர்ரி தெரிவித்தார்.மேலும் இந்த விமானத்தை வாங்குவதன் மூலம் அமெரிக்கா மற்றும் கனடா இடையேயான உறவு நிலையில் 2 புள்ளிகள் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்வீடிஷ் விமானத்தை கனடிய விமானப்படைக்கு வாங்கினால் 50 வருட வரலாற்றில் அமெரிக்காவினால் வடிவமைக்கப்பட்ட போர் விமானத்தை தவிர்த்து வேறு ஒரு போர் விமானத்தை கனடிய அரசாங்கம் பறக்கவிடுவது இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது