95 நாட்களாக வாழ்வா? சாவா போராட்டம்! கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த பிரபல கனேடிய நடிகர்.?

actorcanada
ctv news

41 வயதான நடிகர் நிக் கோர்டரோ ஞாயிற்றுக்கிழமை லொஸ் ஏஞ்சல்ஸில் உயிரிழந்தார். இத்தகவலை அவரது மனைவி அமண்டா க்ளூட்ஸ் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொரோனா தாக்கத்தின் காரணமாக பல உடல் இன்னல்களை அனுபவித்து வந்த நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தனது கணவர் 95 நாட்களாக கொரோனாவுடன் போராடி வந்ததாக அவர் மனைவி கூறினார்.  நிக் கோர்டோ செப்சிஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கொரோனா பாதிப்பின் தாக்கத்தால் இரத்த உறைவு காரணமாக அவரது வலது கால் துண்டிக்கப்பட்டது.

புல்லட்ஸ் ஓவர் பிராட்வேயில் நடித்ததற்காக கோர்டரோ, டோனி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். நிக் கோர்டோ ஹாமில்டனில் வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms