Summer : 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்ட கனடா நகரம்!

Summer
Canada Summer Heat Record

கனடாவில் இந்த முறை கோடைகாலம் ( Summer) வழக்கத்திற்கு மாறாக, மிகுந்த வெப்பம் கொண்டதாக மாறி வருவதை உணர முடிகிறது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவான அதிக வெப்பநிலை, ஒட்டாவாவில் கடந்த ஜூலை மாதத்தில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவா நகரத்தில் கடந்த மாதத்தில் பாதிக்கும் மேற்பட்ட நாட்கள் கடுமையான வெப்ப அலையை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.  ஜூலை மாதத்தில் மட்டும், நான்கு வெப்ப எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் ஒரு எச்சரிக்கை அதிக பட்சமாக ஐந்து நாட்கள் வரைக்கும் நீடித்தது. சுமார் 18 நாட்கள், வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்க்கு மேல் உயர்ந்து காணப்பட்டது.

இதில் மூன்று நாட்கள் வரலாற்றில் உயர் வெப்பநிலை பதிவுகளை முறியடித்தன. அப்போது வெப்பநிலை 20 டிகிரிக்கு கீழே குறையவே இல்லை.

ஜூலைமாத சராசரி வெப்பநிலை அதிக பட்சமாக  30.5 டிகிரி செல்சியஸ் ஆகவும், சராசரி குறைந்த அளவு வெப்ப நிலை 17.4 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்தது.

மாதத்தின் சராசரி வெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.

ஒட்டாவா விமான நிலையத்தில் பதிவான சுற்றுச்சூழல் கனடாவின் வலைத்தளத்தின் தரவுகளின் அடிப்படையில் தொகுக்கப் பட்ட தகவலில், முந்தைய சராசரி உயர் வெப்பநிலை பதிவு 30.3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இது 2012 இல் பதிவானது தெரிய வந்துள்ளது.

மாறி வரும் சூழலியல் மாற்றங்களால், குளிர் பிரதேசமான கனடாவிலும், வெப்ப நிலை, அதிகரித்துக்கொண்டே செல்வது சமீப காலத்தில் அதிகரித்துள்ளது.

முன்னர் என்றாவது வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப் படும் என்கிற நிலை மாறி, ஒரே மாதத்தில் பல எச்சரிக்கை விடுக்கும் நிலை வந்துள்ளது.

canada economy: பலத்த அடி வாங்கிய கனடா பொருளாதாரம் – ஏப்ரல் மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ன ஆனது தெரியுமா?

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms