அடுத்த மூன்று வாரங்களுக்கு கனடாவின் பிரபல மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு!

British Columbia
British Columbia Canada

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில்  Covid-19 வைரஸ் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

வைரஸ் தொற்றின் பாதிப்பு பிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதியில் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

இதையடுத்து அந்த மாகாணத்தின் தலைமை பொது சுகாதார வைத்திய அதிகாரி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

விதிக்கப்படும் அனைத்து கட்டுப்பாடுகளும் எதிர்வருகின்ற மூன்று வாரங்களுக்கு அமுலுக்கு கொண்டு வர இருப்பதாகவும் தகவலை வெளியிட்டுள்ளார்.

தனிமனித இடைவெளி, முக கவசம் அணிதல் மற்றும் சனிடைசர் உபயோகித்தல் போன்ற அடிப்படை விதிமுறைகளை மக்கள் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பாடசாலைகள் மாணவர்களுக்கான வகுப்புகளை மெய்நிகர் வகுப்புகளாக இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் வைரஸ் தொற்று அதிகம் பரவும் இடமாக கருதப்படும் உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் போன்றவற்றிற்கு மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்குவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

இந்த கடுமையான நிபந்தனைகள் அனைத்தும் எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு கடைபிடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கனடாவில் விமர்சையாக நடத்தப்பட்டுவரும் பனிச்சறுக்கு விடுதிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வீசிலர் பிளாக் கோம்பு என்ற பனிச்சறுக்கு விடுதி ஏப்ரல் 19ஆம் தேதி வரையிலான தடைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்று மாகாணம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் மாகாணத்தினால் முடிவு எடுக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது