TD வங்கியில் இனவெறியால் வங்கி கணக்கு மறுக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் – தந்தை இந்தியாவை சேர்ந்தவர்

indigenous muslim racism bank

கனடாவின் டொரண்டோ டொமினியன் வங்கிக் கணக்கு விண்ணப்பத்திற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை 37 வயதான Sharif Bhamji பூர்த்தி செய்தார். ஆன்லைன் படிவத்தை முறையாக பூர்த்தி செய்ததாக நினைத்த Sharif தனது இருப்பிடத்திற்கு திரும்பினார்.

நான்கு நாட்களுக்கு பிறகு தனது அடையாளச் சான்றுகளை சரிபார்ப்பதற்கு மே 5 2021 அன்று தனது இல்லத்திற்கு அருகே உள்ள டொரன்டோ டொமினியன் வங்கி கிளையை அணுகினார். அப்போது விண்ணப்பத்தில் பூர்த்தி செய்திருந்த அடையாளங்கள் மாறியிருந்தது.

உடனடியாக Sharif அவரது இந்திய நிலை அட்டையை வழங்கினார். அப்போது வங்கி அலுவலர் அந்த ஐடி போலியானது என்று கூறியதாக குற்றம்சாட்டியுள்ளார். வங்கி அலுவலரிடம் Sharif ஆத்திரமடைந்ததை தொடர்ந்து அவர்கள் காவல்துறையினரை அழைத்தனர். தற்பொழுது வங்கிக்கு எதிராக கனடிய மனித உரிமைகள் ஆணையத்தில் பாகுபாடு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

முஸ்லிம் பழங்குடியினராக Sharif தன்னை அடையாளப்படுத்திய போது வங்கி அலுவலர் “Sharif Mohammed Bhamji-யா?” என்று விரிவாக கேட்ட போது “ஆம்” என்று அவர் பதிலளித்துள்ளார் .அந்தத் தருணத்தில் இருந்து வங்கி அலுவலர் அதை நம்பவில்லை மேலும் செயல்பாடுகள் கீழ்நோக்கி சென்றன என்று தெரிவித்தார்.

Sharif-ன் தந்தை இந்தியாவைச் சேர்ந்தவர். வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் நிறப் பாகுபாடு பார்ப்பது இழிவான செயலாகும். வங்கிகள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று Slett கூறினார் .இனவெறிக்கு ஆளாக்கப்பட்ட Sharif மற்றும் அவரது குடும்பத்தினருடன் கடினமான நேரத்தில் துணை நிற்கிறோம் என்று Union of B.C Indian Chiefs grand Chief Stewart Phillips கூறினார்