நகர மேயர்களின் ஒருமித்த முடிவு! அடுத்த ஆண்டு வரையில் கனடா எல்லையில் கால் பதிக்க முடியாது!

British Columbia
US-Canada Border Closure Leaves British Columbia's Tourism Industry In Trouble

British Columbia : நகர மேயர்களின் ஒரு குழு கனடா-அமெரிக்கா எல்லையை குறைந்தபட்சம் அடுத்த ஆண்டு வரை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த குழு கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயருடன் ஆன்லைன் வீடியோ மாநாடு மூலம் இந்த வாரம் சந்தித்தது.

கரோனா தொற்று வேகம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவும், கனடாவும் எல்லையை மூட சம்மதம் தெரிவித்தன. அதற்கு பிறகு தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு கொண்டே வருகிறது.

ஆனால், மருத்துவப் பொருட்களை எல்லை வழியாக எடுத்துச் செல்லத் தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை மூடல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் சார்ந்த நடவடிக்கைகள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் இரு நாடுகளும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன.

தற்போது வரை அத்தியாவசியப் பொருட்களை தவிர மற்ற எந்த பொருட்களையும் இருநாடுகளும் தற்காலிகமாக பகிர்ந்து கொள்வதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக இருநாடுகளும் தேவையின்றி மக்கள் எல்லை தாண்டி செல்வதை கட்டுப்படுத்துவது என்று முடிவெடுத்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக கனடா-அமெரிக்க எல்லையை குறைந்தபட்சம் அடுத்த ஆண்டு வரை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடி வைக்குமாறு எல்லை நகர மேயர்களின் குழு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கூட்டத்தில் பேசிய சர்னியா மேயர் மைக் பிராட்லி, எல்லை மூடுதலை நீட்டிப்பது மிகவும் சரியான பாதை என்று கூறினார்.

எல்லைகளை முன்கூட்டியே மீண்டும் திறப்பது மாகாணத்தை மேலும் பின்னுக்குத் தள்ளக்கூடும் என்று பிராட்லி கூறினார்.

தற்போதைய நிலவரப்படி, அத்தியாவசியமற்ற எல்லை தாண்டிய பயணத் தடை செப்டம்பர் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: கனடாவில் பள்ளிகளில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று! திணறும் அரசு நிர்வாகம்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.