ஒன்ராறியோ மாகாணத்தில் நான்காவது தடுப்பூசி – நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதால் ஏற்கனவே தடுப்பூசி பெற்றவர்களும் நான்காவது தடுப்பூசி பெறுவதற்கு அறிவுரை

vaccine

கனடாவின் டொரன்டோ நகரில் நீண்ட கால பராமரிப்பு குடியிருப்பாளர்கள் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான நான்காவது தவணை தடுப்பூசி மருந்துகளை பெற்றுள்ளனர். 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தடுப்பூசி பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் mRNA covid-19 தடுப்பூசி மூன்றின் நான்காவது ஷாட்களை மாகாணத்திலுள்ள முதியோர் இல்லங்கள், நீண்ட கால பராமரிப்பு இல்லங்கள் மற்றும் முதியோர் பராமரிப்பு விடுதிகள் போன்றவற்றில் வசிப்பவர்கள் பெறலாம் என்று அறிவித்திருந்தது. மாகாண அரசாங்கம் அறிவித்த சில வாரங்களில் நான்காவது தடுப்பூசி ஷாட்களை பெறுவதில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுள்ள ஒன்டாரியோர்களும் covid-19 தடுப்பூசியின் நான்காவது தடுப்பூசி டோஸை பெறுவதற்கான முன்பதிவுகளை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Covid-19 தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது கட்ட தடுப்பூசியை இதுவரை பெறாதவர்கள் கூட விரைவில் தடுப்பூசி பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக ஏற்கனவே தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதால் Covid-19 வைரஸ் தொற்றால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர் என்று பொது சுகாதார அமைப்பின் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் கீரன் மூர் கூறினார்

இந்த அமைப்புகளில் உள்ள மாணவர்கள் ,தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஊழியர்கள் எதிர்வரும் ஜனவரி 28ஆம் தேதிக்குள் தங்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டளை இடப்பட்டது.