10,000 சதுர அடி கட்டிடம் – பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்தின் திட்டம் :

922 Glen Street
Fire crews are seen outside 922 Glen Street after a major fire at an apartment building.

டொரன்டோ நகரில் 10,000 சதுர அடி கொண்ட கட்டிடம் ஒரு புதிய சமூக செயல்பாடாகவும், பிளாக் லைவ்ஸ் மேட்டர் அமைப்பினால் இயக்கப்படும் இடமாகவும் விரைவில் மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.24 சிசில் தெருவில் உள்ள சொத்தினை சமூக மையமாக பயன்படுத்த இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜூரி அவென்யூ பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திலிருந்து பிளாக் லைவ்ஸ் மேட்டர் அமைப்பு இயங்கிய மிகச் சிறிய வாடகை இடத்தை கலை மற்றும் செயல்பாட்டிற்கான வைல்ட்சீட் மையம் மாற்ற உள்ளது.

 

 

24 சிசில் தெருவிலுள்ள செய்திக்கான இடத்தில் சந்திப்பு அறைகள், பொது சமையலறை, ரெக்கார்டிங் ஸ்டுடியோ ,நடன ஸ்டுடியோ, மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏதுவான மேடை அமைப்புகளையும் வழங்கும் என்று பிளாக் லைவ்ஸ் மேட்டர் அமைப்பின் அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

 

 

“பிளாக் லைவ்ஸ் மேட்டர் கனடாவை இங்கு அமைப்பதற்கான முதல் திட்டங்களை 2014ஆம் ஆண்டு தொடங்கிய போது ,டொரன்டோ மாகானத்தில் கருப்பின சமூகத்திற்கு இதுபோன்ற தேவை இருப்பதால் , அவர்களுக்கான சமூக மையத்தை இங்கு உருவாக்க விரும்புகிறோம் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்கனவே இருந்தது ” என்று பிளாக் லைவ்ஸ் மேட்டர் கனடா அமைப்பின் இணை நிறுவனர் சைரஸ் மார்க்கஸ் வியாழக்கிழமை காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மக்களை ஒருங்கிணைப்பதற்கு எங்களுக்கு இது போன்ற இடங்கள் தேவை என்று அவர் கூறினார்.

 

 

இத்திட்டத்திற்கு நகரசபை அமைப்பினால் ஒப்புதல் வழங்கப்பட்டால் அந்தப் பகுதியில் உள்ள மேம்பாட்டாளர்களுக்கு பிரிவு 37 கட்டணத்திலிருந்து 250000 டாலர்கள் முதலீடு வழங்கப்படும் என்று லேடன் கூறினார். 24 சிசில் தெருவில் கட்டிடம் அமைப்பதற்கான விலைப்பட்டியல்  கேட்கும் விலையாக 8.2 மில்லியன் டாலர்களாக பட்டியலிடுகிறது.