கருப்பினத்தவர்கள் கழிவறைக்கு செல்ல கூட சரியாக அனுமதிக்கப்படுவதில்லை – கனடாவில் மோசமாகி வரும் இனவெறி

blackcommunity

வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் மற்றும் வணிகம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சர்வதேச நாடுகளிலிருந்து மக்கள் கனடாவிற்கு புலம்பெயர்கின்றனர் . வறட்சி , போர் போன்ற பல்வேறு சூழ்நிலை காரணமாக சொந்த நாடுகளில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக அமையும் நாடுகளில் கனடா முதன்மையானது ஆகும்.

கனடாவின் புலம்பெயர்தல்,அகதிகள் மற்றும் குடியுரிமை அலுவலகத்தில் இனவெறி காட்டப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. IRCC அலுவலகத்திலேயே இனவெறி உள்ளதாக அளிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

கருப்பினத்தவர்கள் முன்னேறுவதற்கு இடையூறுகளையும் ,இனத்தின் அடிப்படையில் விமர்சனங்களையும் அலுவலக பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் செய்து வருகின்றனர்.

புதிதாக பணியில் சேரும் கருப்பினத்தவர்கள் மீது விமர்சனங்கள் மூலம் அதிக அழுத்தம் கொடுப்பதால் ,அவற்றைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் சிலமாதங்களுக்கு உள்ளேயே பணியில் இருந்து நின்று விடுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அலுவலகத்தில் கடுமையான பணிச்சுமைகளுக்கு இடையே பணியாளர்கள் கழிவறைக்குச் செல்ல கூட சரியாக அனுமதிக்கப்படுவதில்லை என்று கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் பணியாளர் தெரிவித்துள்ளார். மேலும் நிறத்தின் அடிப்படையில் பதவி உயர்வு கட்டுபடுத்த படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கனடிய புலம்பெயர்தல் மற்றும் குடிவரவுத்துறை அலுவலகத்திலேயே இனவெறி நிகழ்ந்து கொண்டிருப்பது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.