முதியோருக்கு ஒன்ராறியோ மாகாணம் கொடுக்கும் முன்னுரிமை!

Doug Ford
Ontario Premier Doug Ford says according to health officials the province is now officially in the second wave of the coronavirus pandemic.

ஒன்ராரியோ மாகாணத்தில் கொரோன தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஒன்ராரியோ மாகாணத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் Covid-19 வைரஸ் தாக்கத்தினால் இல்லங்களிலேயே பராமரிக்கப்பட்டு வரும் நபர்களுக்கு என வழங்கப்பட்டு வரும் சிறப்பு covid-19 தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக் கூறுகளை மேலும் அதிகரிப்பதற்காக ஒன்டாரியோ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிறப்பாக, பணம் செலுத்தப்பட்டுள்ள நடமாடும் சேவைகளை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு என கனடா அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில், அந்த சேவைகள் அனைத்தையும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நீண்ட கால பராமரிப்பு இல்ல நிறுவனத்தினர் ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்றும், அதன் மூலம் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அதிகமான எண்ணிக்கையில் மக்களுக்கு வழங்க இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த முன்னெடுப்பு விவகாரத்தில் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களின் நிறுவனர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த கோரிக்கையை ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒன்டாரியோ மாகாண அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் மூலம் குறுகிய காலத்தில் அதிகமான மக்களுக்கு covid-19 வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி மருந்துகளை விரைவாக செலுத்த முடியும் என்பது முக்கிய கூறாகும்.