Beirut : பேரழிவை ஏற்ப்படுத்திய லெபனான் வெடிப்பு சம்பவத்தின் துயர் துடைக்க கனடா செய்யும் உதவி!

Beirut explosions
Canada Pm

லெபனான் நாட்டில் பெய்ரூட் (Beirut) நகரில் கடந்த வாரம் பெரும் வெடிப்பு நிகழ்வு நடந்தது.

பேரழிவை ஏற்ப்படுத்திய அந்த வெடிப்பிலிருந்து மீண்டு வர போராடும் லெபனான் மக்களுக்கு உதவ கனடா முன்வதுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் கடந்த வாரம் துறை முகக்கிடங்கில், சுமார் ஆறு  ஆண்டுகளாக, சசேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் மதிப்பிலான அம்மோனியம் நைட்ரேட் மருந்து வெடித்து சிதறியது.

இந்த விபத்தினால் ஏற்பட்ட பெரும் சேதத்தில் மக்கள் சிக்கிக்கொண்ட நிலையில், பலி எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் அதிகரித்துள்ளது.

சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

துயரம் இதோடு நின்றுவிடாமல், பெய்ரூட் வெடி விபத்தில், சுமார் மூன்று லட்சத்துக்கு அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் தற்போது ஓட்டல் மற்றும் பள்ளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

லெபனானில் நடைபெற்ற இந்த பயங்கர வெடி விபத்துக்கு, பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வருத்தங்களைப் பதிவு செய்துள்ளனர்.

லெபனான் ஏற்கனவே பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த வெடி விபத்து மேலும் லெபனான் பொருளாதாரத்தை பாதித்துள்ளது.

Canada : அமெரிக்காவிற்கு கனடா கொடுக்கப்போகும் பதிலடி! கொரோனா சூழலிலும் நசுக்க நினைத்த அமெரிக்காவின் நடவடிக்கை!

இந்த நிலையில் கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் மருத்துவ உதவிகளை லெபனானுக்கு வழங்க முன்வந்துள்ளன.

இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையும் லெபனான் அரசுக்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் கனடாவுக்கும் தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளது.

அதன்படிகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூடுதலாக 25 மில்லியன் டாலர் உதவியை அறிவித்துள்ளார்.

இது சர்வதேச உதவி முயற்சியில் கனடாவின் மொத்த பங்களிப்பை 30 மில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms