செப்டம்பர் மாதம் 22ஆம் தேதிக்குள் ஒன்ராறியோ மாகாணத்தில் இது முழுமை பெறும் – முதல்வர் டக் போர்டு!

DOUG FORD
DOUG FORD

கனடாவிலுள்ள ஒன்டாரியோவின் சிறப்பு வல்லுனர்கள் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்படுவது குறித்து அறிவுரை தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடை காலத்திற்குள் ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள அனைத்து இளம் வயதினருக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதே தற்பொழுது மாகாணத்தின் முழுமுதல் இலக்காகும்.

மேலும் ஒன்டாரியோ மாகாணத்தின் முதல்வர் டாக் போட் கோடை காலத்தை தொடர்ந்து இரண்டு கட்ட தடுப்பூசி மருந்துகளை விரைவாக வினியோகிப்பது அரசாங்கத்தின் குறிக்கோள் என்று அவர் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் 22ஆம் தேதிக்குள் மாகாணத்தில் உள்ள அனைத்து இளம் பருவத்தினருக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் தடுப்பூசி மருந்துகளை செலுத்துவதே மாகாணத்தின் நோக்கமாகும்.

இதனையடுத்து டொரன்டோ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் இயல் நிபுணர் ஆஷ்லே விரைவாக கனடிய மக்கள் அனைவருக்கும் இரண்டு கட்ட தடுப்பூசி மருந்துகளை முழுமையாக செலுத்தி எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் ஆகவே covid-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கம் இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்து செலுத்துவது குறித்து கூடிய விரைவில் விளக்கமளித்த அறிவிக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி முகாம்கள் அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்றாரியோ மாகாண முதல்வர் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஒன்டாரியோ மக்கள் அனைவரும் இரண்டு கட்ட தடுப்பூசி மருந்துகளையும் பெற்றுக்கொண்டு எதிர்ப்பு சக்தியை தக்க வைத்துக் கொள்வர் என்று அறிவித்துள்ளார்.