கனடாவில் மதுபானசாலைகள் மற்றும் இரவு விடுதிகளில் நள்ளிரவுக்குப் பிறகு அமலுக்கு வரும் நடவடிக்கை!

canadabars
Reduce corona spread in city

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, கியூபெக் மாகாணத்தில் உள்ள மதுபானசாலைகள் மற்றும் இரவு விடுதிகளில் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, இனி அடுத்த உத்தரவு வரும் வரையில் நள்ளிரவுக்குப் பிறகு, மது விற்பனை செய்வதற்கு மாகாண அரசு தடைவிதித்துள்ளது.

மேலும் அனுமதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்தினரை மட்டுமே விடுதிக்குள் அனுமதிக்க வேண்டும். இது தவிர வாடிக்கையாளர்கள் அதிகாலை 1 மணிக்குள் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விற்பனை நிறுத்தப்படுவதோடு மட்டுமல்லாது, வழக்கத்தை விட முன்னதாகவே மூடப்பட வேண்டும். யாரையும் நடனமாட அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது.