பேங்க் ஆப் கனடா பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டிருக்க ஆணை – கனடிய பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து லிபரல் கட்சியினர் புதுப்பித்தல்

Corona Case Canada
Canada Covid 19 Press release

கனடாவின் நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீ லேண்ட் கூட்டாட்சி நிதிகளின் கணக்கை இன்று வெளியிடவும் ,எதிர்வரும் மாதங்களுக்கு அரசாங்கத்தின் பொருளாதார மேற்பார்வையை வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிதியாண்டில் பற்றாக்குறை $155 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் பற்றாக்குறை 354.2 பில்லியன் டாலராக இருந்தது என்பதை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

பணவீக்க விகிதம் அதிக எண்ணெய் விலைகளால் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. லிபரல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பில்லியன் கணக்கில் புதிய செலவினங்களை உறுதியளித்து இருந்தாலும் ,நிதித்துறையின் புதுப்பித்தலில் புதிய செலவின நடவடிக்கைகளின் நீண்ட பட்டியல் இருக்காது என்ற அசைவுகளை தெரிவிக்கிறது.

குழந்தைகள் நல அமைப்பில் நீண்டகால சீர்திருத்த திட்டங்களை மேற்கொள்ள இருப்பதால் திங்களன்று ஒரு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது.நாட்டின் முதல் அரசாங்கம் குழந்தைகளின் நலனிற்காக அவர்களுக்கு இழப்பீடு வழங்க $40 பில்லியன் டாலரை ஒதுக்கியது.

தாராளவாதிகள் வாக்குறுதி அளித்த செலவினங்களில் காலதாமதம் ஏற்படலாம், ஏனெனில் இது பணவீக்க அழுத்தங்களை அதிகரிக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பேங்க் ஆஃப் கனடா பணவீக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க ஒரு திட்டத்தை கொண்டிருந்தாலும், மத்திய வங்கி அதன் 2 சதவீத இலக்கை பணவீக்கத்தை பராமரிப்பதில் பங்கு வகிப்பதாக அரசாங்கம் ஒப்புக் கொண்டது. Covid-19 சிக்கல்கள் பொருளாதார மீட்சியை பலவீனப்படுத்த கூடுமென்று கனடிய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் தலைவர் டென்னிஸ் கூறினார்