அமெரிக்காவில் நிலவிய மோசமான வானிலை காரணமாக கனடா எதிர்கொள்ளும் சிக்கல்!

Zain Chagla
Zain Chagla

கனடாவில் பருவ காலநிலை கடுமையாக உள்ள நிலையில் உருமாறிய வைரஸ் தொற்று மக்களிடையே அதிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாடர்னா தடுப்பூசி நிறுவனம் அடுத்த மாதம் மூன்று மில்லியன் தடுப்பூசிகளை கனடாவிற்கு அனுப்ப உள்ளதாக கொள்முதல் அமைச்சர் ஹரிதா ஆனல் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் முதல் காலாண்டு வினியோக ஏற்பாட்டை பூர்த்திசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் மாதத்தின் இறுதிக்குள் மாடர்னா 2 மில்லியன் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டியது இருக்கும் என்ற நிபந்தனை உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய ஏற்றுமதி மோசமான வானிலை காரணமாக தாமதம் ஆகியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் நிலவிய மோசமான வானிலை காரணத்தால் பைசர் ஏற்றுமதி தாமதப்படுத்த பட்டது என்றும் அறிவித்துள்ளது.

ஏறத்தாழ 4,03,456 தடுப்பூசிகள் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கப்பெறும். இந்த வாரத்திற்கான அநேகமான ஏற்றுமதி நாளை அல்லது நாளை மறுநாள் கனடாவை வந்தடையும் என்று நம்பப்படுகிறது.

அனைத்து தடுப்பூசிகளையும் தடுப்பூசி மருந்து நிறுவனங்களிடமிருந்து பெற்ற பின்னர் கனடாவின் அனைத்து மாகாணங்களுக்கும் தாமதமின்றி மக்களை விரைவில் சென்றடைவதற்கான வழிமுறை மற்றும் நடவடிக்கைகளையும் கனடா அரசாங்கம் தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்க: கடுமையான துப்பாக்கிச் சூடு சட்டம் | கனேடிய நாடாளுமன்றம் நோக்கிய தமிழர்களின் வாகனப் பேரணி – இன்றைய பரபரப்பு!