கனடாவில் இளம்பெண் மீது எச்சில் துப்பி இனவெறி தாக்குதல் நடத்திய இளைஞன்! அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சி!

Calgary
Calgary Women racist attack

கனடாவில் Calgary பகுதியில் பூங்காவினுள் நடந்து சென்ற பெண் மீது, எச்சில் துப்பிய இன வெறியை தூண்டும் வகையில் ஒரு நபர் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Calgary நகரில் உள்ள பூங்காவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Jessica Lau என்ற இளம் பெண் பூங்காவுக்கு தனது காதலனுடன் சென்றிருக்கிறார்.  அப்போது அவர் நடந்து செல்வதை அவரது காதலன் தனது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் இளைஞன் ஒருவன் Jessica செல்லும் பாதைக்கு, எதிர் திசையில் மிதி வண்டியில் வந்து கொண்டிருந்தான்.

Jessica அருகில் வந்த இளைஞன் அவர் மீது எச்சில் துப்பியதோடு மட்டுமல்லாது , இன வெறியை தூண்டும் வகையில் மோசமாக பேசிவிட்டு சென்றுள்ளான்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் காவல் துறையினர் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணான Jessica கூறுகையில், என்னுடைய வாழ்க்கையில் நான் அனுபவித்த முதல் இனவெறி தாக்குதல் இதுதான்.

மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms