கனடாவில் கருணைக் கொலை செய்யப்பட்ட காண்டாமிருகம் – உடல்நிலை மோசமானதால் கொல்லப்பட்டதாகக் டொரன்டோ மிருகக்காட்சி சாலை தெரிவித்தது

ashakiran rhinoceros diead at toronto zoo health issue doctors killed euthanize

கனடாவின் டொரன்டோவிற்கு 2006 ஆம் ஆண்டு ஆஷாகிரன் என்ற நீண்ட காண்டாமிருகம் ஒன்று கொண்டுவரப்பட்டது. ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் டொரன்டோ மிருகக்காட்சிசாலையில் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது. 17 வயது உடைய அந்த காண்டாமிருகம் கடந்த வியாழக்கிழமை அன்று இருந்தது.

கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஷா கிரன் இறந்து விட்டது என்று டொரன்டோ மிருகக்காட்சிசாலை சனிக்கிழமை அறிவித்தது. 2016 ஆம் ஆண்டு ஆஷா கிரன் Nandu என்ற ஆண் காண்டாமிருக குட்டியை ஈன்றது .மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு Kiran என்ற மற்றொரு ஆண் குட்டியை ஈன்றது.இரண்டு குட்டிகளுக்கு தாயான ஆஷா குட்டிகளுடன் மிக பொறுமையாகவும் சிறந்த தாயாகவும் இருந்ததாக மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது.

ஆஷாவின் உடல்நிலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மோசம் அடைந்து வந்ததாக டொரன்டோ உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்திலிருந்து காண்டாமிருகம் சரியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் மந்தமாகிவிட்டடது.

காண்டாமிருகம் வழக்கம்போல் செயல்படவில்லை என்பதை பூங்கா ஊழியர்கள் கவனித்தனர்.இரண்டு மாதங்களாக காண்டாமிருகத்தின் உடல் திரவங்களை மாதிரியாக எடுத்து சோதனை செய்ததில் வெளிவந்த முடிவுகள் முடிவற்றவை என்று ஊழியர்கள் கூறுகின்றனர்

காண்டாமிருகத்திற்கு இரைப்பை குடல் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவ குழு முடிவு செய்தது. சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் நோயைக் கண்டறிய முடியாததால் காண்டாமிருகத்தின் மோசமான உடல் நிலையை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சையின் போது மருத்துவ குழு காண்டாமிருகத்தின் காவலர்களுடன் இணைந்து கருணை கொலை செய்வதற்கு முடிவு எடுத்தது.

இறந்த காண்டாமிருகம் பூங்காவின் சிறந்த அங்கமாக இருந்ததாகவும், அதன் நினைவுகள் எங்களை விட்டு நீங்காமல் இருக்கும் என்றும் மிருகக்காட்சி சாலை தெரிவித்தது