கனடாவிற்கு பயணிப்பவர்கள் கவனத்திற்கு – ArriveCan app-ல் பதிவேற்றம் செய்யுங்கள்

corona in canada, canada corona, covid 19, கொரோனா, கனடா,

Covid-19 வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் கனடாவிற்குள் நுழைவதற்கு சர்வதேச பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை முழுமையாக பெற்றவர்கள் தடுப்பூசி சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று கனடிய அரசாங்கம் அறிவித்திருந்தது.

நவம்பர் 30-ஆம் தேதி முதல் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் 72மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்படும் PCR பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு உள்ளவர்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.

கனடிய குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், குடியுரிமை பெற்றவர்கள், இந்திய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் 12 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் ஆகியோருக்கு கனடாவிற்குள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை முழுமையாக பெற்றிருக்க வேண்டும். Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளின் இரண்டாவது கட்ட தடுப்பூசி மருந்தினை கனடாவிற்குள் நுழைவதற்கு 14 நாட்களுக்கு முன்பே பெற்றிருக்க வேண்டும். ArriveCAN செயலியில் தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அஸ்ட்ராஜெனகா, பைசர்,மாடர்னா, சினோபார்ம்,சினோவாக் மற்றும் பாரத் பயோடெக் கோவேக்சின் போன்றவை கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளாகும். கனடாவிற்குள் நுழைவதற்கு முன்பு Covid-19 தடுப்பூசி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை முழுமையாக பெற்றிருக்கவேண்டும் என்று கனேடிய அரசாங்கம் சர்வதேச பயணிகளுக்கு வலியுறுத்தியுள்ளது