கனடாவிற்குள் நுழையும் பயணிகள் கவனத்திற்கு – Arrivecan செயலியில் பயணச் சான்றுகளை சமர்ப்பிக்கலாம்

arrivecan

விமான நிலையங்களில் 15 வினாடிகளில் எலக்ட்ரானிக் கேட்டை கடக்க முக அடையாளம் காணும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகள் விமானத்தில் இருந்து இறங்குவதற்கு முன்பே அவர்களது தரவுகளை சுங்க அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவை அனைத்தும் கனடா பார்டர் சர்விஸ் ஏஜன்ஸி பணிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள சில மாற்றங்கள் ஆகும்.மேலும் Covid-19 தொற்றுநோய் பரவலின் விளைவாகும்

நாட்டின் எல்லையில் தொழில்நுட்ப மாற்றங்களை ஏஜென்சி பரிசீலித்து வருவதாக CBSA-ன் பயணிகள் கிளையின் துணை தலைவரான டெனிஸ் வினெட் கூறினார். Covid-19 பெருந்தொற்றின் விளைவாக CBSA ஒரு மிகப்பெரிய சவாலை எதிர் கொண்டது.

பயணிகள் சமர்ப்பிக்க வேண்டிய மருத்துவ தகவல்களை எவ்வாறு கையாள முடியும் என்ற கேள்வி எழுந்தது. Arrivecan செயலியை பயன்படுத்துவதை சிறந்த தீர்வாகும் என்று கூறப்பட்டது.

தேவையான தகவல்களை சிறந்த முறையில் வேகமாக கையாள்வதற்கு Arrivecan செயலில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக வினட் கூறினார். கனடாவின் வான்கூவர் மற்றும் டொரன்டோ விமான நிலையங்களில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அமைப்பிற்கான களத்தையும் Arrivecan செயலி கொண்டுள்ளது.

சர்வதேச நாடுகளில் இருந்து கனடாவிற்கு திரும்பும் பயணிகள் தங்கள் விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாகவே தரவுகளைச் சுங்க அமைப்புகளுக்கு தானாகவே முன்வந்து அனுப்புவதற்கு இந்த செயலி அனுமதிக்கிறது. விமானத்தில் இருந்து தரை இறங்குவதற்கு முன்பு பயணிகள் டிஜிட்டல் பயணச் சான்றுகளை Arrivecan செயலியில் எளிதாக சமர்ப்பிக்கலாம் என்று கூறினார்.