ஹெல்த் கனடா எச்சரிக்கை – கனடாவில் ஆபத்தை உண்டாக்கும் மருத்துவ பொருள் விற்பனைக்கு வந்தது!

Anti-Microbe
Health Canada Just Recalled 'Anti-Microbe' Hand Sanitizers That Were Given Out In Schools

ஜனவரி 22 அன்று, ஹெல்த் கனடா “நுண்ணுயிர் எதிர்ப்பு” கை சுத்திகரிப்பான் தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. அவை குழந்தைகளுக்கு ஆபத்தானவை என்று தெரிவிக்கப்பட்டது.

திரும்ப பெறப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்ட கை சுத்திகரிப்பான்களான  “ஆன்டி மைக்ரோப்” என்று பெயரிடப்பட்ட கை சுத்திகரிப்பான், டிஐஎன் 02248351 என்ற அடையாளத்தை கொண்டிருக்கும்.

தனிப்பட்ட அல்லது வீட்டு பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டதை விட பென்சல்கோனியம் குளோரைடு அதிக அளவில் இருப்பதால் அவை திரும்ப அழைக்கப்படுகின்றன.

மேலும் சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு பாதிப்பை உண்டாக்கும்.

கியூபெக்கைச் சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளுக்கு இந்த வகையான பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

அவை ஒன்ராறியோ மற்றும் கியூபெக்கில் முக்கியமாக கடையில் மற்றும் ஆன்லைனில் பொதுமக்களுக்கு விற்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட தயாரிப்புகள் பல்வேறு பெயர்களில் விற்கப்படுகின்றன. அவற்றை அடுத்து காணலாம்.

  • Anti-Microbe
  • 32 Anti-Microbe
  • Essence 360 Anti-Microbe
  • Nutra One Anti-Microbe
  • Paoch Anti-Microbe
  • Produits Bio-Expert Anti-Microbe
  • Trilux Anti-Microbe
  • Yunisan Handzo

வெளிப்படையாக, இது போன்ற தயாரிப்புகள் வயது வந்தோருக்கான பயன்பாட்டிற்கு என  பெயரிடப்பட வேண்டும் மற்றும் தொழில்துறை அமைப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

“நுண்ணுயிர் எதிர்ப்பு” என்று பெயரிடப்பட்ட அல்லது டிஐஎன் 02248351 ஐ உடனே வைத்திருக்கும் சானிட்டீசரைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படியுங்க:

கனடாவின் மிகப்பெரிய நகரத்தை விரைவில் இந்திய தலைநகருடன் இணைக்க ஏர் கனடா திட்டம்!