வாழ்த்துக்களை தெரிவித்த தமிழ் பெண் அளித்த ஆனந்த் – கனடிய துணை பாதுகாப்பு துறை அமைச்சராக பில் மேத்யூ

anita
minister of defense

கனடாவில் நடைபெற்ற 2021 பிரதமர் தேர்தலில் லிபரல் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பதவியேற்றார். லிபரல் கட்சி சிறுபான்மையில் வெற்றி பெற்றதால் தேர்தல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்தன. பதவி ஏற்றதை தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது புதிய அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ள அமைச்சர்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டார்.

கனடிய பாதுகாப்புத்துறை அமைச்சராக இந்தியாவின் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டார். தற்போது நாட்டின் துணை பாதுகாப்புத்துறை அமைச்சராக பில் மேத்யூஸ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் அனிதா ஆனந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எதிர்வரும் 11ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பில் மேத்யூ தேசிய துணை பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு துறை அமைச்சர் அனிதா ஆனந்த் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பில் மேத்யூ கனடியர்களின் சிக்கலான கோப்புகளை கையாளுவதில் மிகச் சிறந்தவர் ,உயர் பதவியில் ஒரு பொது ஊழியர் துணை பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் என்று பாராட்டிய பாதுகாப்புத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் மீண்டும் பில் மேத்யூ உடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்