இனி இந்த மாதிரியான தடுப்பூசி மருந்துகளையே கனடா ஏற்கும் – கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் அதிரடி அறிவிப்பு!

anita canada
anita canada

கனடா கொள்முதல் அமைச்சர் புதிய தடுப்பூசி மருந்து தொடர்பான பேச்சுவார்த்தை நடுத்தர அளவில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அமைச்சர் அனிதா ஆனந்த் அவர்கள், நாங்கள் 2022-ம் ஆண்டுக்கான அதிரடியாக திட்டமிட்டு கொண்டிருக்கிறோம் என்று அறிவித்துள்ளார். சமீபத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கனடாவின் தற்பொழுது நோக்கம் அனைத்தும் இன்னும் வரவிருக்கின்ற தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொள்வதில் மட்டுமே இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இதர நாடுகளிடமிருந்து பெற வேண்டியுள்ள மீதி தடுப்பூசி மருந்துகளை கடந்த மாதம் கிட்டத்தட்ட பெற்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கனடாவிற்கு ஏற்கனவே தடுப்பூசி மருந்துகளை வழங்கி கொண்டிருக்கும் நிறுவனங்கள் புதியதாக உருமாறி உள்ள covid-19 வைரஸ் தொற்றுகளுக்கும் சோதனையை நடத்தி வருகிறது.

அதனால் புதிய தடுப்பூசி மருந்துகள் பெற்றுக்கொள்வதற்கு உருமாறி இருக்கும் வைரஸ் தொற்று எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்கக்கூடிய தடுப்பூசி மருந்துகளையே கனடா ஏற்கும் என்று தெரிவித்துள்ளார்.

இனி கனேடியர்களுக்கான தடுப்பூசி மருந்து வழங்குதலில் எந்த ஒரு சிக்கல்களும் ஏற்படாது!

அதனோடு அஸ்திரா ஜெனிகா மற்றும் மாடர்னா ஆகிய தடுப்பூசி மருந்து நிறுவனங்கள் இந்த சோதனையை செய்து கொண்டிருப்பதாகவும் தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும் இளம் வயதினர் மற்றும் சிறுவர்களுக்கு செலுத்தக்கூடிய தன்மையில் தடுப்பூசி மருந்து ஆனது கண்டுபிடிக்கப்பட்டால் சிறப்பானதாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற நிறுவனங்கள் ஒரே டோஸ் தடுப்பூசி மருந்து வழங்குவதாக தகவலை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.