இந்தியர்களின் பாரம்பரியத்தை போற்றி தபால்தலை வெளியீடு – தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்த அனிதா ஆனந்த்

justin trudeau fb

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வியாழக்கிழமை நடைபெற்ற கொண்டாட்டத்தில் தேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் அனிதா ஆனந்துடன் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு covid-19 வைரஸ் தொற்று காரணமாக கனடாவில் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாமல் இருந்தது. இந்த வருடம் இந்தோ – கனடியர்கள் தீபாவளியை உறவினர் மற்றும் நண்பர்களுடன் கட்டுப்பாடுகளை பின்பற்றி கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையில் தீமை என்னும் இருள் மீது நன்மை என்னும் ஒளி விளக்கு பாய்கிறது ,இந்தத் திருநாளில் குடும்பங்களும், நண்பர்களும் இனிப்புகள் மற்றும் பரிசுகளை பரிமாறிக் கொள்வார்கள் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கான பட்டாசுகள் பிராம்டன் போன்ற நகராட்சிகளில் இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டுள்ளன. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல்களின் படி தனிப்பட்ட தீபாவளி கொண்டாட்டங்கள் சாத்தியமாகி உள்ளன. தீபாவளியைக் கொண்டாடும் குடும்பங்கள் சமூக இடைவெளி முக கவசம் அணிதல் போன்ற விதிமுறைகளை முறையாக கடைபிடித்தனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடிய அமைச்சரவையில் 2019 ஆம் ஆண்டில் அமைச்சராக பதவியேற்ற முதல் இந்து ஆவார். தீபாவளி பண்டிகையில் பிரகாசமான மற்றும் அழகான நாள் அமையட்டும் என்று அமைச்சர் அனிதா ஆனந்த் ட்விட்டரின் வாயிலாக தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஹர்ஷித் சஜ்ஜனும் தீபாவளி வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்தியர்களின் தீபாவளித் திருநாளை சிறப்பிக்கும் வகையில் கனடிய தபால் துறை சிறப்பு தபால் தலையை வெளியிட்டது. இந்திய மக்களையும் பாரம்பரியத்தையும் கனடா தொடர்ந்து சிறப்பித்து வருவது இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்துகிறது