தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர் – கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்கும் இந்திய வம்சாவளி பெண்

anita canada
anita canada

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்பதில் இந்தியர்கள் பெருமை கொள்கின்றனர். தமிழர்களும் அனிதா ஆனந்த் பாதுகாப்பு அமைச்சராக பதவி ஏற்கும் இரண்டாவது பெண்மணி என்பது தமிழர்களை பெருமிதம் அடையச் செய்துள்ளது.

லிபரல் கட்சியின் அமைச்சர் அனிதா ஆனந்த்தின் தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். தாயார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இந்திய வம்சாவளியில் வந்த அனிதா கனடாவில் பிறந்து தற்பொழுது Oakville நகரில் வசித்து வருகிறார்.

பிரதமரின் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டதற்கு தலைவர்கள் மற்றம் எதிர்க்கட்சிகள் போன்ற அனைத்து தரப்பினரும் வரவேற்றனர்.

கனடிய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள கனேடிய ராணுவத்திற்கு மிக முக்கியமான நேரத்தில் அமைச்சராக அனிதா ஆனந்த் பொறுப்பேற்கிறார் என்று கூறப்படுகிறது.

கனடிய பாதுகாப்பு அமைச்சராக பதவி ஏற்கும் இரண்டாவது பெண்மணி என்ற நிலையில் அனிதா ஆனந்தை நோக்கி பல்வேறு கேள்விகளும் கருத்துக்களும் எழுந்து வருகின்றன. அனிதா ஆனந்த் எதிர்கொள்ளும் கேள்விகளில் ஒன்றானது, கனேடிய ராணுவ படையின் மீது அவரால் எந்த அளவிற்கு கட்டுபாட்டை செலுத்த முடியும் என்பதுதான்.

கனடாவில் Covid-19 வைரஸ் தொற்று நோய் பரவலின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகள், தனிப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் போன்றவற்றை கொள்முதல் செய்வதில் அனிதா ஆனந்தின் பங்களிப்பு பாராட்டுவதற்கு உரியதாகும்.