அமெரிக்கா கனடா இடையிலான முடக்க நிலை கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிப்பு!

america canada border
canada

அமெரிக்கா கனடா இடையிலான முடக்க நிலை கட்டுப்பாடுகள் இன்னும் சில தினங்களில் முடிய உள்ள நிலையில், கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இதற்காக இருநாட்டு தரப்பிலும் பேச்சுவாரத்தை நடந்து வந்த நிலையில்,  தொடர்ந்து அமெரிக்காவுடன் அத்தியாவசியமற்ற பயணத்திற்கு வாய்ப்பில்லை என்று உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த தடை பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 21 உடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகளின் முடிவில், ஆகஸ்ட்  21 ஆம் தேதி வரை அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், வர்த்தகம் சார்ந்தவர்கள், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் எல்லையின் அருகில் வசிக்கும் மக்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற முக்கிய சுகாதாரப் பணியாளர்களுக்கும் விலக்கு அளிக்கிறது.

மற்றபடி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும், அத்தியாவசிய பயணத்திற்கும் தடை தொடர்ந்து நீடிக்கும்.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms